
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன, Space x மற்றும் X தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் டொனால்ட் டிரம்பை நேர்காணல் செய்தார்.
இந்த நேர்காணலை எக்ஸ் தளத்தில் நடந்தது. எலோன் மஸ்க் நீண்ட காலமாக டிரம்ப் ஆதரவாளராக இருந்து வருகிறார்.

இந்த நேர்காணலில், எதிர்க்கட்சி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட பைடன் உடல்நிலை சரியில்லாததால் விலகினார் அதனால் டிரம்ப் கடுமையாக சாடினார், . நேர்காணல்களுக்கு பயப்படுவதாகவும் மற்றும் கமலா ஹரிசையும் விமர்சித்தார்.
டிரம்ப் அதிபரானால், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அகற்றப் போவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போதைய அமெரிக்க அதிபர் தேர்தலின்படி, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப்புக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறுகின்றனர்.
ஜனநாயகக் கட்சியின் நிச்சயமற்ற தன்மை முதன்மையான காரணியாகக் கருதப்படுகிறது. ஜோ பைடன் முதலில் வேட்பாளராக முன்மொழியப்பட்டார் பின்பு அவர் வயது காரணமாக விலகிவிட்டார்.
அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸ் நியமிக்கப்பட்டார், இது நிச்சயமற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
இருப்பினும், தேர்தல் முடிவுகள் கேள்விக்கான சரியான பதில் அளிக்கும் அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.

