ஆந்திராவில் தேசிய நெடுஞ்சாலையில் அவசர காலங்களில் ராணுவ விமானங்கள் தரையிறங்கும் ஒத்திகை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் அவசர காலங்களில் போர் மற்றும் ராணுவ விமானங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் தரையிறக்குவது போன்ற ஒத்திகைகளை இந்திய விமானப்படை மேற்கொள்கிறது. அந்தவகையில் ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தின் பிச்சுகலகுடிபாடு என்ற கிராமத்தின் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை 16ல் அவசர தரையிறங்குவதற்கு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒத்திகையின் போது 2 போர் விமானம் மற்றும் 3 ராணுவ விமானங்கள் தரையிறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது.
விரைவில் தமிழகத்தில் விமான ஓடுதளங்கள் விரைவில் மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஒடிசா மற்றும் ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் அவசர காலங்களில் விமானங்களை அவசரமாக தரையிறக்க விமான ஓடுதளங்கள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.