நாடு திரும்பினார் உலகச் சாம்பியன் குகேஷ்; சென்னையில் உற்சாக வரவேற்பு

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சிங்கப்பூர் சீனா சுற்றுலா செய்திகள் தமிழர் விளையாட்டு தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சென்னை வந்த குகேஷுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அதிகாரிகள் அதுல்ய மிஸ்ரா, மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அண்மையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரரை வீழ்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் பட்டம் வென்றார். குகேஷக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நாளை பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் குகேஷுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
“சிறு வயதில் இருந்தே செஸ் விளையாட்டை விரும்பி மகிழ்ச்சியுடன் விளையாடினேன். இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. 14 சுற்றுகளையும் சவாலாக நினைத்து விளையாடினேன். அனைத்து சூழல்களிலும் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி இருவரும் உதவியாக இருந்தனர்” என உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சென்னை திரும்பிய குகேஷ் பேட்டியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *