23.12.2021 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் நடைபெற உள்ள வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை- 2022 பெருவிழவிற்கான அழைப்பிதழை தந்து பேரவையின் நிர்வாகிகள் திரு.கால்டுவெல் வேல்நம்பி, திரு. பாலசாமினாதன், திரு. மயிலாடுதுறை சிவா, திரு.கீர்த்தி ஜெயராஜ், திரு. சேகர் சுவாமிநாதன், திரு. கதிரவன், திரு. ராம்மோகன், திரு.ரங்கநாதன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர். அப்போது தாய்த்தமிழ்ப் பள்ளிகளை வட அமெரிக்காவில் நிறுவ உதவி புரியும் படியும், நியூயார்க்கில் தழிழர்களுக்கான கட்டடம் நிறுவ ஆதரவு அளிக்கும் படியும், சித்திரை 1ஆம் நாளை தொல்காப்பியர் நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்தனர். வட அமெரிக்காவில் தமிழ் வளர்ச்சிக்கு உரித்தான மற்றும் பல அம்சங்களையும் பேரவையினர் முதல்வரிடம் முன்வைத்தனர்.
