ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தி சாஹல் புதிய சாதனை

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் மும்பை அணி வீரர் முகமது நபியின் விக்கெட்டை சாஹல் கைப்பற்றியபோது ஐபிஎல் தொடரில் தனது 200 ஆவது விக்கெட்டை பதிவு செய்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *