தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை தருவது, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவது என தமிழுக்கு பல சிறப்புளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதேபோன்று பல்வேறு பல்கலைக்கழகங்ளில் தமிழ் இருக்கைகள் அமைப்பது, தமிழில் பட்டங்கள் அளிப்பதென பலவகையில் தமிழுக்கு உலகம் முழுக்க சிறப்புகள் செய்து வருகிறார்கள்.
ஐரோப்பிய பல்கலைக்கழகங்களிலும் தமிழில் பட்டங்கள் பெறுவதென இன்றைய காலகட்டத்தில் தமிழுக்கு பெருமை சேர்கிறார்கள். ஜெர்மனியில் உள்ள தமிழர்கள் பெரும்பாலும் தமிழை உலகின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். ஜெர்மனியில் உள்ள தமிழ் மாணவர் மாணவிகள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை தமிழில் பட்டம் பெற்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து இந்தாண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2021, 2022ம் ஆண்டிற்கான பட்டங்கள் இந்தாண்டு வழங்கப்பட்டது. எல்லாத்துறைகளும் படிப்பு ஆங்கிலத்தில் மாறிப்போன இக்காலகட்டத்தில் தமிழில் பட்டம் வாங்குவது பெருமைக்குறிய செயலாகும்.