குட் பேட் அக்லி படத்தின் டீசர் அறிவிப்பு வெளியானது

இந்தியா சிறப்பு சினிமா செய்திகள் தமிழ்நாடு

அதிக ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்டுள்ளது. அஜித்துடன் சேர்ந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் . இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாவது பார்வை போஸ்டர்கள் வெளியிடப்பட்டு, சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு ரசிகர்கள் இடையில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது, மேலும் தற்போதுபடத்தின் பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் சுமார் ரூ.270 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறது. சமீபத்தில், திரிஷாவின் கதாபாத்திரம் தொடர்பான அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டது.இந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டீசர் வரும் 28-ந்தேதி வெளியிடப்படும் என்ற தகவலை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *