நடிகை நயன்தாரா நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படம் தொடர்பான சர்ச்சை; நடிகர் தனுஷ் மீது பகிரங்க குற்றச்சாட்டு

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா சின்னத்திரை செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் நீதி மன்றம் மற்றவை முதன்மை செய்தி

நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்ஸ்டாகிராமில் 3 பக்க கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022, ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் என முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்தத் திருமண நிகழ்வுகளை ஆவணப்படுத்தி அதன் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்ததால் அதிகாரப்பூர்வமாக அந்நிகழ்வின் விடியோக்கள் எதுவும் இன்றுவரை வெளியாகவில்லை.
நான் வேண்டிக் கொள்கிறேன்.
இந்த உலகம் பெரியது, இது அனைவருக்குமானது.
உங்களுக்குத் தெரிந்தவர்கள் வாழ்க்கையில் மேலே வரலாம்.
சினிமா பின்னணி இல்லாத சாதாரண மனிதர்கள் பெரிய பிரபலங்கள் ஆகலாம்.
சிலர் தங்களுக்கான வாழ்க்கையை ஏற்படுத்தி மகிழ்ச்சியாக இருக்கலாம். அது உங்களிடமிருந்து எதையும் பறிக்காது.
இது அவர்களின் பணி, ஆசீர்வாதம், மக்களின் அன்புக்கான மரியாதை மட்டுமே.
நீங்கள் சில போலிக் கதைகளை உருவாக்கி, பன்ச் வசனங்களுடன் தயார் செய்து உங்களுடைய அடுத்த இசை வெளியீட்டிலும் பேசலாம். ஆனால் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
‘schadenfreude’ என்ற ஒரு ஜெர்மன் வார்த்தையை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். (மற்றொருவரின் துன்பத்தில் இருந்து ஒருவர் பெறும் மகிழ்ச்சி). அந்த உணர்வை இனி எங்களிடமிருந்தோ அல்லது வேறு யாரிடமிருந்தோ பெற மாட்டீர்கள் என்று நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
மனிதர்களை இழிவாகப் பார்க்கும் இந்த உலகில், மற்றவர்களின் மகிழ்ச்சியிலும் நம்முடைய மகிழ்ச்சி இருக்கிறது. மற்றவர்களின் கதைகளின் மூலமாக இந்த நம்பிக்கை இருக்கிறது. அதுதான் எங்களுடைய நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தின் பின்னணியும். நீங்களும் கண்டிப்பாக அதைப் பார்க்க பரிந்துரைக்கிறேன். ஒருவேளை அது உங்கள் மனதை மாற்றலாம். அன்பைப் பரிமாறுவது முக்கியம். என்றாவது ஒருநாள் நீங்களும் அதை வெறுமனே சொல்லாமல் முழுமையாகச் செய்ய முடியும் என்று நம்புகிறேன், அதற்காக கடவுளிடமும் வேண்டிக்கொள்கிறேன் என்று நயன்தாரா கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *