தாய்லாந்து ஃபூகெட் வன உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணியை தாக்கிய புலி

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சுற்றுலா செய்திகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் நிகழ்வுகள் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி வனவிலங்குகள் விபத்துகள்

தாய்லாந்து நாட்டில் பிரபலமான சுற்றுலா நடவடிக்கையாக புலியைத் தொட்டு, அதற்கு ஆகாரம் கொடுப்பது, அதன் மீது சாய்ந்தும், நம் மீது அதனை ஏறவைத்தும், அதன் வாலைப் பிடித்தப்படியும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கை இருந்துவருகிறது.
இதற்காக உலகம் முழுக்க இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்து நாட்டிற்குச் சென்றுவருகின்றனர். அதிலும், யூடியூபர்களின் பயணத்தால், தாய்லாந்தில் தற்போது இந்தச் சுற்றுலா நடவடிக்கை மிகவும் பிரபலமாகிவருகிறது.
இந்த நடவடிக்கையில், வன உயிரியல் பூங்கா ஊழியரும், புலியின் பயிற்சியாளருமான ஒருவர் எப்போதும் புலியுடன் இருப்பார்கள். அவர்களின் வழிகாட்டுதலின்படி புலி நடந்துகொள்ளும், அதேபோல், சுற்றுலாப்பயணிகளும் அந்த நபர் சொல்வதைப் பின்பற்றி புலியுடன் தங்கள் விருப்பம் போல் புகைப்படம் எடுத்துக்கொள்வர்.
அந்தவகையில், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் தாய்லாந்து நாட்டிற்குச் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளார். அங்கு ஃபூகெட் வன உயிரியல் பூங்காவில், புலியைக் கண்டு ரசிக்கவும், அதனுடன் போட்டோ எடுக்கவும் முடிவு செய்த அவருக்கு அதிர்ச்சிக்கரமான சம்பவம் நடந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்திலும் வைரலாகிவருகிறது.
இணையத்தில் வைரலாகும் வீடியோவின்படி, இந்திய இளைஞர் புலியுடன் போட்டோ எடுக்க முற்படுகிறார். அப்போது, கழுத்தில் சங்கிலியிடப்பட்டு புலி, தனது பயிற்சியாளருடன் இருக்கிறது. சங்கிலியை இந்திய இளைஞர் பிடித்திருக்க, புகைப்படம் எடுக்க அந்த இளைஞர் தயாரானார். அப்போது, அந்தப் பயிற்சியாளர் புகைப்படம் எடுப்பதற்காக அந்தப் புலியை அமரச் சொல்லித் தனது கையில் இருக்கும் குச்சியை வைத்து அதற்கு உத்தரவிடுகிறார். இந்தச் சம்பவம் நடந்துகொண்டிருக்கும் அதேசமயத்தில், நொடிப்பொழுதில், அந்தப் புலி திடீரென ஆவேசம் அடைந்து இந்திய இளைஞரைக் கொடூரமாகத் தாக்குகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *