வருமான வரித்துறை நடத்தி வரும் சோதனைக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிவருகிறோம் என பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி – இந்தியா அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனைகளை நடத்தினர். அப்போது பிபிசி அலுவலகத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களின் தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வீட்டுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லண்டனில் உள்ள பிபிசி அலுவலகத்திற்கு வருமான வரித்துறையின் ரெய்டு பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய ரெய்டின் போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிபிசி நிறுவனம்; டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். நாங்கள் முழுமையாக ஒத்துழைத்து வருகிறோம். வருமான வரி விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளது.
![](https://nritamil.com/wp-content/uploads/2023/02/images-3-1.jpeg)