சிபிஎஸ்சி 10ஆம், 12ஆம் வகுப்புத் தேர்வுகள் நாளை தொடங்குகின்றன – மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு

இந்தியா உயர்கல்வி செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் வரும் நிகழ்ச்சிகள்

CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்குவதையொட்டி, மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 21ம் தேதி வரையும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5ம் தேதி வரையும் நடக்கவுள்ளன. பத்தாம் வகுப்புகளுக்கு ஓவியம் உள்ளிட்ட கலைப்படிப்பு பாடங்களுக்கான தேர்வு நாளை தொடங்குகிறது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழில் முனைவோர் பாடத்தேர்வு நாளை தொடங்க உள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்கிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 21,86, 940 பேர் தேர்வெழுதகின்றனர். இதில், 12,47, 364 பேரும், மாணவிகள் 9, 39, 566 பேரும், இதர பிரிவினர் 10 பேரும் தேர்வெழுத உள்ளனர். நாடு முழுவதும் 7,240 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 24,491 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். 76 பாடங்களுக்கு 16 நாட்களுக்கு நடைபெறும் தேர்வு மார்ச் 21ந் தேதி முடிவடைய உள்ளது.
12ம் வகுப்பு பொறுத்த வரையில், மொத்தம் 16, 96, 770 பேர் தேர்வெழுதிகின்றனர். இதில், மாணவர்கள் 9,51,332 பேரும், மாணவிகள் 7,45, 433 பேரும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.