ஹோர்முஸ் நீரிணை கடந்த 2 எரிவாயு கப்பல்கள்

அமெரிக்கா அரசியல் அரபு நாடுகள் இந்தியா உலகம் செய்திகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பொருளாதாரம்

ஹோர்முஸ் நீரிணையை கடந்த மேலும் இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் தற்போது இந்தியா நோக்கி பயணம் செய்து வருகின்றன. ஜக் வசந்த் மற்றும் பைன் கேஸ் என்ற இந்த கப்பல்கள் மொத்தம் சுமார் 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி (LPG) வாயுவை சுமந்து கொண்டு வருகின்றன. இந்த கப்பல்கள் சர்வதேச கடல் எல்லையை கடந்த நிலையில், இந்திய கடற்படையின் ஒரு போர்க்கப்பல் பாதுகாப்பு வழங்கி வருகிறது. வரும் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் இந்த கப்பல்கள் இந்தியாவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து மத்திய கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, நாட்டில் சமையல் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டில் தற்போது தினமும் சுமார் 55,000 டன் எல்பிஜி உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கனவே வளைகுடா நாடுகளிலிருந்து இரண்டு கப்பல்கள் இந்தியா வந்துள்ள நிலையில், இப்போது மேலும் இரண்டு கப்பல்கள் வருவதால் எரிவாயு தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *