உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் 2028: புவனேஷ்வர் நகரில் நடத்த இந்தியாவுக்கு முறைப்படி உரிமை வழங்கப்பட்டது

இந்தியா உலகம் செய்திகள் தமிழர் விளையாட்டு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை, வரும் 2028ல் நடத்த இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலக தடகள கவுன்சில் கூட்டம், போலந்தின் டோருன் நகரில் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில், வரும் 2028ல் உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை புவனேஷ்வர் நகரில் நடத்த இந்தியாவுக்கு முறைப்படி உரிமை வழங்கப்பட்டது. இத்தகவலை உலக தடகளை அமைப்பின் துணைத் தலைவர் அடிலே சுமரிவாலா, போலந்தில் நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார். உலக உள்ளரங்க தடகள போட்டிகள் வரும் 20-22 தேதிகளில் போலந்தில் நடைபற உள்ள நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, உலக தடகள போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, இந்திய தடகள கூட்டமைப்பு தலைவர் பஹாதூர் சிங் சாகூ, இந்தாண்டின் துவக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த போட்டியை நடத்த நியூசிலாந்து நாடும் விருப்பம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் போட்டியை நடத்தும் வாய்ப்பு தற்போது இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *