மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ₹11,718 கோடி ஒதுக்கீடு – ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு

2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்வதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த நிதி ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டது. வரும் 2027 கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பையும் உள்ளடக்கியதாக இருக்கும் என முன்பே அரசு தெரிவித்தது. மேலும், இது நாட்டில் நடைபெறும் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களில் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக வீடுகளின் விவரங்களை சேகரிக்கும் பணி 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். இரண்டாவது கட்டமாக நேரடி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்று அமைச்சரவை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *