சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு மண்டல பூஜைகாக கோயில் நடை திறக்கப்பட்டு 25 நாள்களை கடந்துள்ள நிலையில் உள்நாடு, மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினசரி லட்சக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா். தினசரி பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தரிசன நேரத்தை 45 நிமிடங்கள் நீட்டித்துள்ளது கோவில் தேவசம் வாரியம்.வழக்கமாக கோவில் சன்னிதானம் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 1 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு அடைக்கப்படும். தற்போது 1.30 மணிக்கும், இரவு 11.15 மணிக்கும் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

