இந்தியாவின் புதிய ராணுவ தலைமை தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இன்ஜினியர் ஒருவருக்கு இந்தப் பொறுப்பு அளிக்கப்பட இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இந்திய முப்படைத் தளபதிகளின் குழுத் தலைவராகவும், ராணுவ தலைமை தளபதியாகவும் இருந்து வரும், எம்.எம்.நரவானேவின் பதவி ஜாலம் வரும் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக புதிய ராணுவ தலைமை தளபதியை மத்திய அரசு நியமித்துள்ளது.
இப்பொறுப்பை ஏற்கவிருக்கும் முதல் இன்ஜினியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது துணை ராணுவ தலைமை தளபதியாக இருந்து வரும் மனோஜ் பாண்டே, கிழக்கு பிரிவு மற்றும் அந்தமான் நிக்கோபார் பிரிவு தளபதியாக முன்னர் பணியாற்றி உள்ளார்.