பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் 2’. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய இந்த நாவல் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரிலேயே உருவானது. இதில் இடம்பெற்றிருந்த கதாபாத்திரங்களை தத்ரூபமாக பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மணிரத்னம் ரசிகர்களுக்கு காட்டியிருந்தார்.
இரு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது பாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. உலக முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அதனால் இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஏற்கனவே இப்படம் மூன்று நாட்களில் 100 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் தற்போதைக்கு 200 கோடிக்கு வசூல் சாதனை படைத்துள்ளது. இது படக்குழுவினர் உற்சாகப்படுத்தியுள்ளது.