இஸ்ரேலியப் படைகள் லெபனான் முழுவதும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பின் இலக்குகளைத் தாக்கத் தொடங்கியுள்ளது

அரசியல் உலகம் ஐரோப்பா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் போர் மற்றவை முதன்மை செய்தி

ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய கூட்டுத்தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனையடுத்து இஸ்ரேலைக் குறிவைத்தும், பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, ஈரான் எதிா் தாக்குதலை நடத்தி வருகிறது.
இதற்கிடையில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழுக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
ஆயத்துல்லா கமேனியின் தூய இரத்தத்திற்குப் பழிவாங்கும் விதமாகவும் … லெபனான் மற்றும் அதன் மக்களைப் பாதுகாப்பதற்காகவும், இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும்” இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹெஸ்புல்லா தெரிவித்தது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக லெபனான் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 149 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய இராணுவம் கூறியதாவது:
ஹெஸ்பொல்லாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக” இஸ்ரேலியப் படைகள் “லெபனான் முழுவதும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பின் இலக்குகளைத் தாக்கத் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *