நீதிபதிகள் ஃபேஸ்புக் பயன்படுத்துவதையும், அவற்றில் கருத்துகள் பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.Advertisement
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தால் இரண்டு பெண் நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பணிநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளில் ஒருவர், நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஃபேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டதாக நீதிமன்றத்துக்கு தெரியவந்தது.இதனையடுத்து இதுதொடர்பாக பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்,
நீதிபதிகள் ‘துறவிகளைப் போல’ வாழ வேண்டும். ‘குதிரைகளைப் போல’ பணியாற்ற வேண்டும். அதே நேரத்தில் தீர்ப்புகள் குறித்த தனிப்பட்ட கருத்துக்களைத் தவிர்க்க வேண்டும். நீதித்துறை அதிகாரிகள் பேஸ்புக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் தீர்ப்புகள் குறித்த கருத்துகளை தெரிவிக்கக்கூடாது. ஏனென்றால் நாளை தீர்ப்பு வழங்கப்பட்டால், நீதிபதி ஏற்கனவே அந்த தீர்ப்பை மறைமுகமாக கூறிவிட்டார் என்றாகிவிடும். சமூக ஊடகம் ஒரு திறந்த தளம்” என தெரிவித்தனர்.