கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல்.

அரசியல் உலகம் கனடா சமூக வலைதளங்கழ் செய்திகள்

கனடாவின் உள்நாட்டு அரசியல் சிக்கல்களின் காரணமாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று தனது பதவி விலகலை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது, ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் தனது பதவியை விலகுவார் எனக் கூறப்படுகிறது. இதற்கேற்ப, அவர் இன்று அல்லது இந்த வாரத்திற்குள் தனது பதவி விலகலை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP) ஆதரவைத் தொடர மறுத்ததால், ட்ரூடோவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதற்கிடையில், சர்வதேச நெருக்கடிகளை சந்தித்து வரும் ட்ரூடோ, உள்நாட்டு அரசியலில் அவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு முக்கியமான கூட்டணிக் கட்சியாக உள்ளார். அவர், மக்களுக்கு சேவை செய்யும் பணியில் ட்ரூடோ தோல்வியுற்றதாகவும், ஜனவரி 27-ம் தேதி அவரது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார். இதனால், ட்ரூடோக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில், ட்ரூடோவின் அமைச்சரவையில் இருந்து துணை பிரதமரும், நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் ராஜினாமா செய்தார். இதன் பின்னணியில், அவரது சொந்த லிபரல் கட்சியில் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. இதனால், அவர் இன்றைய தினம் அல்லது இந்த வாரம் தனது ராஜினாமாவை அறிவிக்க வாய்ப்பு உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.வரும் புதன்கிழமை, லிபரல் கட்சி ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்தவுள்ளது. இந்த கூட்டத்தில், கட்சியின் எதிர்காலத்திற்கான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். குறிப்பாக, இடைக்கால பிரதமர் யார் என்பதற்கான முடிவும் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. கூட்டத்தின் முடிவுகளைத் தொடர்ந்து, ட்ரூடோ தனது பதவியை விலக்குவதாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *