இஸ்ரேல் ஈரான் தாக்குதல் தொடர்கிறது; போர் நிறுத்தம் இல்லையென்ற நிலையில் அமெரிக்கா வருத்தம்

அமெரிக்கா அரசியல் அரபு நாடுகள் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் போர் மற்றவை முதன்மை செய்தி

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் – இஸ்ரேல் இடையே 12 நாட்களாக நடந்த பயங்கர மோதலில் திடீர் திருப்பமாக இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளதால், உலக அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே போர் நிறுத்தத்திற்கு பின் இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில்போர் நிறுத்தம் அறிவித்த பிறகும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்துவதால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். என்ன செய்கிறார்கள் என்பதே தெரியாமல் 2 நாடுகளும் நெடுநாட்களாக சண்டையிட்டு வருகின்றன. ஈரான் அதன் அணு ஆயுத திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முடியாது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடாது. போர் விமானங்களை உடனே திரும்ப அழைக்குமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் வலியுறுத்தினார். தாக்குதலை தொடர்ந்தால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக கருதப்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *