தமிழக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் நலவாரியம் அமைத்து அதற்கு கார்த்திகேய சிவசேனாபதியை தலைவராக நியமித்து உத்தவிட்டது. அதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை சிவசேனாபதி வெளியிட்டுள்ளார்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழர்களுடைய பாரம்பரிய சிந்தனையைக் கொண்டு
‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்னும் ஔவையின் முதுமொழியின் படி கடல் கடந்து உள்ள, மொழிவாரியான எல்லைகள் கடந்து உள்ள நம் தமிழ் சொந்தகளுக்காக,
தமிழ் நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக “புலம்பெயர் தமிழர் நல” வாரியத்தை உருவாக்கி அதன் தலைவராக எனக்கு வாய்ப்பளித்த முதல்வர், கழகத் தலைவர் அவர்களுக்கு,
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்தார்.