இன்று ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை, குடியரசுத் தலைவர் மாளிகையில் தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 4 பேருக்கு மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது, 32 பேருக்கு அர்ஜுனா விருது, மற்றும் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இவை அனைத்தையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். கடந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் கோட்டியில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கர், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், 2023ல் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர், மற்றும் 2021 மற்றும் 2024 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் முன்னணி வீரர் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் உயரம் தாண்டுதலில் பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரவீன் குமார் மற்றும் அவரது குழுவினர் குடியரசுத் தலைவரிடம் இருந்து மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருதினைப் பெற்றனர். இதற்கிடையில், ஹாக்கி, செஸ், குத்துச் சண்டை, துப்பாக்கிச் சுடுதல் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய 32 வீரர்கள், ஜோதி யர்ராஜி, அன்னு ராணி, நீது, ஸ்வீட்டி, வங்கிட அகர்வால், அபிஷேக், சஞ்சய், ஜர்மன்பிரீத் சிங், சுக்ஜீத் சிங், ராகேஷ் குமார் ஆகியோர் அர்ஜுனா விருது பெற்றனர். இதில் 17 பேர் பாரா-தடகள வீரர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது சுச்சா சிங் மற்றும் முரளிகாந்த் ராஜாராம் பெட்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது சுபாஷ் ராணா, தீபாலி தேஷ்பாண்டே, சந்தீப் சங்க்வான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. பயிற்சியாளர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது முரளிதரன் மற்றும் அர்மாண்டோ அக்னெலோ கொலாகோ ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்திய உடற்கல்வி அறக்கட்டளைக்கு ராஷ்ட்ரிய கேல் புரோட்சஹான் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வழங்கப்படும் செயல்திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் புள்ளிகள் முறை மூலம் வருடாந்திர விருதுகள் தீர்மானிக்கப்படுகின்றன. கேல் ரத்னா விருது பெற்றவர்களுக்கு ரூ. 25 லட்சம் ரொக்கப்பரிசு, பதக்கம் மற்றும் பட்டயம் வழங்கப்படுகின்றன. அர்ஜுனா விருது பெறுபவர்களுக்கு ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பரிசு, பதக்கம் மற்றும் பட்டயம் வழங்கப்படுகிறது.
 
	

 
						 
						