இஸ்ரோவின் “ஸ்பேடெக்ஸ்” திட்டம், விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனை படைத்தது.

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி விண்வெளி சார்ந்தவை

இஸ்ரோ நிறுவனத்தின் சார்பில் கடந்த டிசம்பர் 30ம் தேதி, ஸ்பேடேக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என்ற இரண்டு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. தொடர்ந்து, ஜனவரி 7ம் தேதி முதல் முறையாக டாக்கிங் செயல்முறை நடைபெறும் என இஸ்ரோ அறிவித்திருந்தது, ஆனால் பிறகு இதனை ஜனவரி 9ம் தேதிக்கு மாற்றினர். அதற்குப் பிறகு, ஜனவரி 9ம் தேதி அன்றும் சில தொழில்நுட்ப காரணங்களால் கடைசி நிமிடத்தில் டாக்கிங் சோதனை முயற்சி கைவிடப்பட்டது, இதனால் தரவுகள் ஆராயப்பட்டு வந்தன. இந்நிலையில், இஸ்ரோ சார்பில் கடந்த டிசம்பர் 30ம் தேதி, ஸ்பேடேக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என்ற இரண்டு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து, விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்திய ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, விண்ணில் இரண்டு செயற்கைக்கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இந்தியா, 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்ட 4 நாடுகளில் ஒன்றாக பெருமை பெற்றுள்ளது. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றியில் பங்களித்த விஞ்ஞானிகளுக்கு புதிய இஸ்ரோ தலைவர் நாராயணன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *