பெரும் நஷ்டத்தை சந்தித்த இந்திய வர்த்தகம்; 3000 புள்ளிகள் குறைந்து வீழ்ச்சியில் முடிந்த இந்திய பங்குச்சந்தை

இந்திய வணிகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி

இந்திய பங்குச் சந்தை இன்று காலை தொடங்கியது முதலே கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகளால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் இருந்து விலகி பாதுகாப்பான சொத்துக்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இது நீடித்த வர்த்தகப் போரின் அச்சங்களைத் தூண்டி, புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று கடுமையாக சரிவுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, இன்று காலை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தலா 3 சதவீதம் சரிவைக் கண்டன.
இதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 3000 புள்ளிகள் சரிந்து 72 ஆயிரத்து 509 புள்ளிகளில் வர்த்தகமானது. அதேநேரம், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி புள்ளிகள் சுமார் 930 புள்ளிகள் சரிந்து 21 ஆயிரத்து 975 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது.
இந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் இன்று அதிகபட்சமாக 22,254.00 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 21,743.65 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 742.85 புள்ளிகள் குறைந்து 22,161.60 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *