கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக்கில் நடிகர் சிலம்பரசன் நடிக்கப் உள்ளதாக பரவும் தகவல்

இசை இந்தியா சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக்கில் நடிகர் சிலம்பரசன் நடிக்கப் உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான விராட் கோலி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அவரிடம் சமீபத்தில் நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்ட பாடல் என்ன? என்று கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த விராட்கோலி, STR நடித்த பத்து தல படத்தில் இடம்பெற்ற “நீ சிங்கம் தான்” என்ற பாடலை தான் மீண்டும் மீண்டும் கேட்பதாக கூறினார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தப் பாடல் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, நடிகர் சிலம்பரசன் இந்த வீடியோவை பகிர்ந்து, விராட் கோலியை “நீ சிங்கம் தான்” எனக் குறிப்பிட்டு வாழ்த்தினார். இந்த நிலையில், விராட் கோலியின் பயோபிக்கில் (வாழ்க்கை வரலாறு) நடிகர் சிலம்பரசன் நடிக்கப் உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த தகவல் ரசிகர்களிடையே, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிம்பு மற்றும் விராட் கோலி இருவருக்கும் தனித்துவமான beard (தாடி) ஸ்டைல்கள் இருப்பதால் இருவரின் போட்டோக்களையும் போட்டு ஒப்பிட்டு பல பதிவுகள் வந்தன. நடிகர் சிலம்பரசன் தற்போது கச்சிதமான உடற்கட்டுடன் உள்ள நிலையில், பல வகைகளில் அவர் விராட் கோலியைப் போலவே தோற்றமளிப்பதாகவும் பலர் தெரிவித்து இருந்தனர். இதுவே தற்போது விராட் கோலியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயோபிக்கில் சிம்பு நடிக்கப் போகிறார் என்ற செய்தி பரவக் காரணமாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *