தமிழ் மொழி மற்றும் தென்னிந்திய அரசர்கள் தொடர்பாக பள்ளி பாட புத்தகங்களில் போதிய பாடங்கள் இடம்பெறவில்லை; நடிகர் மாதவன் குற்றச்சாட்டு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் சினிமா செய்திகள் தமிழ் பள்ளி நிகழ்வுகள் தமிழ்க்கல்வி தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தமிழ் மொழி மற்றும் தென்னிந்திய அரசர்கள் தொடர்பாக பள்ளி பாட புத்தகங்களில் போதிய பாடங்கள் இடம்பெறவில்லை என நடிகர் மாதவன் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த மாதவன், தாம் படித்த காலத்திலேயே முகலாயர்கள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ குறித்து 10 பாடங்கள் இருந்ததாகவும், சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் தொடர்பாக ஒரு பாடம் மட்டுமே இருந்தாகவும் தெரிவித்துள்ளார்.b
800 ஆண்டுகளாக ஆட்சிய செய்த வெள்ளையர்கள், முகாலாயர்கள் குறித்து விரிவான பாடங்கள் இடம்பெற்ற நிலையில், 2 ஆயிரத்து 400 ஆண்டுகளாக ஆட்சி செய்த சோழர்கள் குறித்து ஏன் விரிவாக பாடப்புத்தகத்தில் இடம்பெறவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அவர்களின் ஆட்சியின் போது கடல் வழி வணிகம், கோயில் கட்டப்பட்டது, சீனாவில் ஜெயின், இந்து, புத்த மதங்கள் பரவியது குறித்து பாடப்புத்தகங்களில் இல்லை என்றும், கொரியர்கள் பாதி தமிழை பேசுகிறார்கள், அந்த அளவுக்கு நம் மொழி பரவி இருந்தாகவும் அவர் கூறினார்.
ஆனால் தற்போது NCERT புத்தகத்தில் முகலாயர்கள் குறித்த பாடங்கள் சில நீக்கப்பட்டு அரசின் திட்டங்கள், கும்ப மேளா தொடர்பான பாடங்கள் சேர்க்கப்பட்டதை பலர் விமர்சிப்பது குறித்து பேசிய உள்ள மாதவன், நமது வரலாற்றை பாட புத்தகத்தில் சேர்ப்பதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.
சிபிஎஸ்இ 7ஆம் வகுப்பு பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் பற்றிய அனைத்து குறிப்புகளையும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம் (என்சிஇஆர்டி) நீக்கியுள்ளதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்த மாற்றம், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *