1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிரா அரசு.

அரசியல் இந்தியா கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் சிறப்பு செய்திகள்

மகாராஷ்டிரா அரசு, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தி பாடத்தை கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தியுள்ளது மகாராஷ்டிரா அரசு. இந்த அறிவிப்பை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தாதா புசே நேற்று வெளியிட்டார். அரசாணையில் ‘கட்டாயம்’ என்ற சொல் நீக்கப்பட்டு, புதிய ஆணை வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தியை கட்டாயமாக்கும் அரசின் உத்தரவுக்கு எதிராக மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா, உத்தவ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், மகாராஷ்டிரா அரசின் மொழி ஆலோசனைக் குழு முதல்வர் தேவேந்திர பட்நவிசுக்கு எழுதிய கடிதத்தில் இந்தி கட்டாயமாக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. மகாராஷ்டிராவில் இந்தி மொழி கட்டாயமாக இல்லை; மராத்தி மொழி மட்டுமே கட்டாயமாகும் என முதல்வர் பட்நவிஸ் தற்போது அறிவித்துள்ளார். மாநில கல்வியமைச்சர் தாதா புசே நேற்று கூறியதாவது, மாநிலத்தில் மராத்தி மொழியை கற்பது கட்டாயமாக்கப்படும். மராத்தி மொழியின் கற்பிப்பு திறம்பட செயல்படுத்தப்படுவதை கல்வித் துறை கண்காணிக்கும். ஏற்கெனவே பிறப்பித்த அரசு உத்தரவில் கட்டாயம் என்ற வார்த்தையை நீக்குகிறோம். திருத்தப்பட்ட அரசாணை பின்னர் வெளியிடப்படும். மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பது அவரவர் விருப்ப தேர்வாகவே இருக்கும் என தாதா புசே கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *