2 நாள் அரசு முறைப்பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்ற பிரதமர் மோடி, காஷ்மீர் தாக்குதலால் அவசரமாக நாடு திரும்பினார். சவுதி பட்டத்து இளவரசரை சந்தித்த பிறகு, அவர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வதற்கும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், காஷ்மீர் தாக்குதலால் ஏற்பட்ட பதற்ற சூழலால், அவர் தனது பயணத்தை பாதியில் நிறுத்தி, நாடு திரும்பியுள்ளார். காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக, டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முக்கிய சுற்றுலா தலங்களில் காவல்துறை கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

