உத்திரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் கூட்ட நெரிசலால் 31 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா, அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக வருகை தருகின்றனர், இன்று தை அமாவாசையை முன்னிட்டு 10 கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் உள்ள உடல்களின் அடிப்படையில் இந்த தகவல்கள் உறுதியாகியுள்ளன. கூட்ட நெரிசலில் காயமடைந்த 30 பெண்கள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் படுகாயம் அடைந்தவர்களை 70க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ள கருத்தில், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் ஏற்படுத்தப்பட்ட அரைகுறையான ஏற்பாடுகள் மற்றும் நிர்வாக குளறுபடியே இந்த துயரத்தை உருவாக்கியதாக அவர் கூறியுள்ளார். வி.ஐ.பி.க்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் காரணமாக ஏற்பட்ட இடப்பற்றாக்குறையும் கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்துள்ளது. எதிர்காலத்தில் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, போதுமான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். உணவு மற்றும் முதலுதவி வழங்குவதற்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், பக்தர்கள் வருவதற்கான பாதைகளை அமைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கான காரணமாக நிர்வாகத்தின் குறைபாடுகளை குறித்துள்ளார். அவர், கூட்ட நெரிசல்களைத் தடுக்கும் வகையில் கண்காணிப்புகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கிடையில், கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் விவரங்களை உத்தரப்பிரதேச அரசு இதுவரை வெளியிடவில்லை. கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக 8 மணி நேரத்திற்கும் மேலாக உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களும் அறிவிக்கப்படவில்லை. இதற்குப் பிறகு, முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பிரதமர் மோடி மூன்று முறை தொடர்பு கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த பிரதமர் மோடி உத்திவிட்டுள்ளார்.
