கடலூர் ரயில் விபத்து எதிரொலி: ரயில்வே கேட்களில் சிசிடிவி கேமரா பொருத்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் விபத்துகள்

கடலூர் ரயில் விபத்திற்கான எதிரொலியாக, அனைத்து ரயில்வே கேட்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு வழங்கியுள்ளார். ரயில்வே கேட்களில் 11 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவித்துள்ளார். அதில், கேமராக்கள் பொருத்தப்படும் பகுதிக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட வேண்டும். 10,000 வாகனங்களுக்கு மேல் கடந்து செல்லும் ரயில்வே கேட்களை இண்டர் லாக்கிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மாற்ற வேண்டும். இண்டர் லாக்கிங்கிற்கு மாற்றப்படாத பகுதிகளில், ரயில்வே கேட்களை தினமும் ஆய்வு செய்ய வேண்டும். இண்டர் லாக்கிங் இல்லாத பகுதிகளில் ரயில் வருவதை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும். பொதுமக்களே மூடி, திறக்கும் ரயில்வே கேட்களை கண்டறிந்து கணக்கெடுக்க வேண்டும்.இண்டர்லாக்கிங் இல்லாத கேட்களில் கேட் கீப்பர், ஸ்டேசன் மாஸ்டரின் குரல் பதிவுகளை கண்காணிக்கவும்.ரயில்வே கேட் அருகில் வேகத்தடைகள், எச்சரிக்கை| பலகைகள் இருப்பதை உறுதி செய்கலெவல் கிராசிங்கில் இண்டர்லாக்கிங் பணிகளை விரைந்து முடிக்கவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *