மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் புதிய செயற்குழு மற்றும் இயக்குனர் குழு அறிமுகம்

செய்திகள் தமிழ் சங்கங்கள்

நமது மிசௌரி தமிழ்ச் சங்க விழாக்களை மேலும் சிறப்புடனும், தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், கலைகளையும் போற்றிடவும், தொடர்ந்து அமெரிக்க மண்னில் அடுத்த தலைமுறைக்கான தளம் அமைக்கவும், நமது தமிழ்ச் சங்கத்தின் கட்டமைப்பை மேலும் வளம்பெற செய்யவும், நாம் வாழும் இடத்தில் நம்மால் இயன்ற வரை அறப்பணிகளில் ஈடுபடவும், உள்ளூரில் இயற்கையை போற்றிடும் நோக்கிலும், சங்க உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடனும் சிறப்புடன் வளர்ச்சியை நோக்கி பயணிப்போம். இதன் பொருட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் உங்களுடன் இணைந்து சமூகப் பணியாற்ற இருக்கின்ற செயற்குழு மற்றும் இயக்குனர் குழு உறுப்பினர்களை வரவேற்று உங்கள் ஆதரவு கரங்களை அளிக்குமாறு இரு கரம் கூப்பி அன்புடன் வணங்குகின்றேன்.

தாழ்மையுடன்,
செந்தில் இராதாகிருட்டிணன்
தலைவர், மிசௌரி தமிழ்ச் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *