தமிழ்நாடு முழுவதும் 6.07 கோடி SIR விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் ஒரு பகுதியாக இன்று மாலை வரை தமிழ்நாடு முழுவதும் 6.07 கோடி SIR விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இது மொத்த இலக்கின் 94.74% ஆகும்.அவ்விண்ணப்பங்களில் மக்களால் பூர்த்தி செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் அதிகாரிகளிடம் 13.02% விண்ணப்பங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன. வீடு–வீடாகச் சென்று வாக்காளர் விவரங்களைச் சேகரிக்கும் BLO (Booth Level Officer)கள் இந்தச் சேகரிப்பு பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சேகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *