இந்தியாவின் பிரதமராக முன்றாவது முறையாக மோடி பதவியேற்றுக் கொண்டார்; குடியரசுத் தலைவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடி இன்றிரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்கிறார். அவருடன், முதல்கட்டமாக 30 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஆளும் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வென்று ஆட்சியை 3வது முறையாக தக்கவைத்துக் கொண்டது. தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணிக் கட்சி எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதையடுத்து, பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட திரவுபதி முர்மு ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி பதவியேற்று கொண்டார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பிரதமராக பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவுகள், செஷல்ஸ், மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பாஜக ஆட்சியில் உள்ள மாநில முதல்வர்கள், அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா, விளையாட்டு, நீதி, மருத்துவம் உள்ளிட்ட துறைசார்ந்த பிரபலங்களும் இவ்விழாவில் பங்கேற்றுள்ளனர்.பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், 30 கேபினட் அமைச்சர்கள் உட்பட 72 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *