கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக குரங்க காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களில் 40-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் குரங்கு காய்ச்சல் காரணமாக அம்மாநிலத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஷிவமொக்கா மாவட்டத்தின் ஹோசநகர் தாலுகாவில் ஜனவரி 8ஆம் தேதி ‘குரங்கு காய்ச்சல்’ காய்ச்சல் காரணமாக 18 வயது சிறுமி உயிரிழந்தார். அதே போல் உடுப்பி மாவட்டம், மணிப்பாலில் சிக்கமகளூருவில் உள்ள சிருங்கேரி தாலுகாவைச் சேர்ந்த 79 வயது முதியவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் குரங்கு காய்ச்சல் காரணமாக 2 பேர் உயிரிழந்ததை அடுத்து அங்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் அங்கு வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்க தற்போதைய நெறிமுறைகளை சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கர்நாடகாவில் மொத்தம் 49 பேருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (34 வழக்குகள்) உத்தர கன்னட மாவட்டத்தில் அதிகபட்சமாக 34 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து ஷிவமொக்காவில் 12 பேருக்கும், சிக்கமகளூரு மாவட்டத்தில் 3 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் குளிர் காய்ச்சல், உடல் வெப்பநிலையில் திடீர் உயர்வு, தசை வலி, முதுகுவலி, இருமல் குமட்டல் மற்றும் வாந்தி என கண்டறியப்பட்டுள்ளது.

