சினிமா என்ற கலையுலகம் பலருக்கும் கனவு. அப்படிப்பட்ட கனவுலகில் வெற்றியைப் பதித்தோர் ஏராளம். சினிமாவல் கிடைக்கும் புகழ், பணம், வசதி இவையாவும் எல்லோரையும் நொடியில் கவரும். இக்கனவுலக ஹுரோக்களுக்கு என்றென்றும் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்திய சினிமா தனது நூறு வயதைக் கடந்து இன்றும் கம்பீர நடைப்போடுகிறது. நூற்றாண்டு விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
செப்டம்பர் மாதம் 16ம் தேதி வருடந்தோறும் தேசிய சினிமா தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் தேசிய சினிமா தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பிவிஆர் மட்டும் ஏனைய சினிமா திரையரங்குகளில் அன்றைய தினம் திரையிடப்படும் அனைத்துக் காட்சிகளுக்கும் கட்டணமாக ரூ.75/- மட்டும் வசூவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது. இதனால் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சினிமா டிக்கட் கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பது சினிமா ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தைக் கிளப்பியது. இந்த நேரத்தில் இப்படியான செய்தி சினிமா மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் என்பது உண்மை.