தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கு என தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் காலகாலமாக உண்டு. எம்.எஸ்.வி, ராமமூர்த்தி இணை தொடங்கி, இளையராஜா, சங்கர் கணேஷ் இணை, தேவா, ஏ.ஆர் ரகுமான், வித்யாசாகர், பரத்வாஜ் போன்றோர்கள் தமிழிசையை ஆட்சி செய்தனர். இவர்களுக்கு இன்றளவும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். இதில் இளைஞர்களை கவருவது ஒருசிலரின் இசை மட்டுமே. அப்படி 25 ஆண்டுகளாக இசை ராஜாங்கம் நடத்தும் யுவன் சங்க ராஜா இளைஞர்களின் காதலுக்கு என்றென்றும் உற்றதுணை.
யுவன்சங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனாவார். இவர் 1996ம் ஆண்டு இசையமைப்பாளாராக அறிமுகம் ஆனார். இவர் துள்ளுவதோ இளமை மிகப் பெரிய படமாக அமைந்தது. அன்று முதல் இளைஞர்களின் காதலுக்கு யுவன் மிகப்பெரிய தூண். அதன்பின் 7G ரெயின்போ காலணி மற்றொரு புரட்சியை ஏற்படுத்தியது. இளையராஜாவின் மகனாக இருந்தாலும் அவரின் சாயலே இல்லாமல் யுவனின் இசை இளைஞர்களைப் பெரிதும் கவருவதாக இருந்தது.
யுவன் சங்கர் பல்வேறு விருதுகளும் வென்றிருக்கிறார். தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது இரண்டுமுறையும், கலைமாமணி விருதும் தமிழக அரசு யுவனுக்கு வழங்கி சிறப்பித்தது. சைமா விருது, பிலிம்பேர் விருது, விஜய் விருது என பல்வேறு விருதுகளை வென்று குவித்துள்ளார்.
இந்த விருதுக்கெல்லாம் கிரிடமாக இந்தாண்டு சத்தியபாமா பல்கலைக்கழகம் யுவன்சங்கர் ராஜாக்கு கவுரவ டாக்டர் பட்டம் சிறப்பித்துள்ளது. யுவன் பெற்ற இந்த கவுரவம் இளைஞர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது.