நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தப் படம் ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 350 கோடி ரூபாய் வசூலை, ஜெயிலர் திரைப்படம் நெருங்கியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்தப் படம் இந்திய அளவில் கடர் 2, ஓஎம்ஜி 2, போலா ஷங்கர் ஆகிய படங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. பாலிவுட்டை பொறுத்த வரை கடந்த வார இறுதிநாட்களில் மேற்சொன்ன படங்கள் இணைந்து மொத்தமாக ரூ.390 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய மல்டிபிளெக்ஸ் திரையரங்க சங்கமும் கில்ட் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து அறிக்கை விட்டுள்ளன.
