மாலத்தீவின் வடக்கு பகுதியில் இந்தியாவின் ரூ.7,000 கோடி நிதியுதவியுடன் கட்டப்பட்ட ஹனி மது சர்வதேச விமான நிலையம் (Hanimaadhoo International Airport) நேற்று திறந்து வைக்கப்பட்டது.இந்த விமான நிலையத்தை மாலத்தீவு அதிபர் முகமது முய்சு திறந்து வைத்தார். விழாவில் இந்திய ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு மற்றும் இந்திய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் EXIM வங்கி நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட இத்திட்டம், மாலத்தீவின் வடக்கு தீவுகளுக்கும் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் நேரடி விமான சேவைகளை உருவாக்கும். இதனால், மாலத்தீவின் பயணத்துறை மற்றும் வர்த்தக வளர்ச்சி மேலும் பல மடங்கு உயர்த்தப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்தியாவும் மாலத்தீவும் இணைந்து மேற்கொண்டு வரும் “நேபர் ஹூட் ஃபர்ஸ்ட்” (Neighbourhood First) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

