ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஹவாய் தீவில் சுனாமி தாக்கியது.

அமெரிக்கா இயற்கை பேரிடர் இயற்க்கை உலகம் சுற்றுச் சூழல் செய்திகள் ரஷ்யா விபத்துகள்

ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்பத்தில் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 என பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான், அலாஸ்கா, ஹவாய் பகுதிகளை சுனாமி தாக்கியது. தொடர்ந்து சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், ஹவாய், சிலி, ஈகுவாடர், பெரு, பிரெஞ்சு பாலினேசியா, குவாம், கோஸ்டாரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹவாய் தீவில் சுனாமி தாக்கியதால் துறைமுகம் மூடப்பட்டது. சுனாமி தாக்கியதை அடுத்து ஹவாய் தீவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹவாய் தீவை தொடர்ந்தும் அலாஸ்கா தீவிலும் சுனாமி தாக்கியுள்ளது. ரஷ்யாவில் நிலநடுக்கம், சுனாமியால் மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளது. சுனாமி எச்சரிக்கையை அடுத்து ஜப்பானில் 19 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் பசிபிக் தீவுகள் மற்றும் அமெரிக்கா முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு சுனாமி ஆபத்து இல்லை என்று பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *