பெலாரஸ் நாட்டு வழக்கறிஞருக்கு 2022ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள்

2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பானது கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் நிலையில், இன்று அமைத்திக்கான நோபல் பரிசை மூவர் வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியம், மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் சிறந்த படைப்புகளையும், கண்டுபிடிப்புகளையும் செய்து தங்கள் சேவையினால் உலக மக்களுக்கு நன்மைகளை செய்து வரும் சிறந்தவர்களை தேர்வு செய்து ஆண்டு தோறும் நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. சுவீடனை சேர்ந்த நிறுவனங்கள் இந்த விருதிற்கான பரிந்துரை பட்டியலில் இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்கிறது.
2022ம் ஆண்டான நடப்பாண்டில் அக்டோபர் 3ம் தேதி முதல் வரிசையாக ஒவ்வொரு விருதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அக்டோபர் 7ம் தேதியான இன்று அமைதிக்கான நோபல் பரிசு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ரஷ்யா -உக்ரைன் போர் பதற்ற நிலை காரணமாக இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை வெல்லப்போவது யார் என்று பலதரப்புகளில் இருந்தும் எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது.
இந்நிலையில், இன்று 2022ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை ஒரு தனி நபர் மற்றும் இரண்டு அமைப்புகளுக்கு வழங்க நார்வே நோபல் கமிட்டி முடிவு செய்துள்ளது. பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்க், ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல் மற்றும் உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான சிவில் லிபர்டீஸ் மையம் ஆகியவற்றுக்கு 2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. பரிசு பெற்றவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை ஆவணப்படுத்த சிறந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.