வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் அடிக்கடி ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார். குறிப்பாக தென் கொரியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், அவரது மகள் கிம் ஜூ ஏ நாட்டின் அடுத்த தலைவராக அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கிம் ஜூ ஏ தற்போது 13 வயதாகிறார். அவர் 2022ஆம் ஆண்டு முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றினார். அதன் பின்னர் பல ஏவுகணை சோதனைகள் மற்றும் ராணுவ அணிவகுப்புகளில் தந்தையுடன் கலந்து கொண்டு வருகிறார்.இந்த மாத இறுதியில் வட கொரிய தொழிலாளர் கட்சியின் முக்கிய மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் கிம் ஜோங் உன் தனது மகள் கிம் ஜூ ஏவை தனது வாரிசாக அறிவிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வட கொரிய அரசியலில் முக்கிய மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

