இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, மும்பை மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் மோசமான உடல்நிலை காரணமாக இன்று மாலை அனுமதிக்கப்பட்டு நிலையின் இரவு மறைந்தார்.
86 வயதான தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வயது மற்றும் தொடர்புடைய மருத்துவ நிலைமைகளின் காரணமாக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை மாலையில் 2வது முறையாக இதே வாரத்தில் அனுமதிக்கப்பட்ட போது பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ரத்தன் டாடா உடல் நிலை குறித்து பல வதந்திகள் மாலை முதல் வெளியான நிலையில், இரவு 11 மணிக்கு மேல் பிரபல தொழிலதிபரான ஹர்ஷ் கோங்கா தனது டிவிட் மூலம் ரத்தன் டாடா மறைவை உறுதி செய்தார்.
ஹர்ஷ் கோங்கா அவருடைய டிவீட்டில் கடிகாரம் ஒலிப்பதை நிறுத்திவிட்டது. டைட்டன் இறந்துவிட்டார். ரத்தன் டாடா ஒருமைப்பாடு, நெறிமுறை தலைமை மற்றும் நன்கொடை ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக இருந்தார், அவர் வணிக உலகிலும் அதற்கு அப்பாலும் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளார். அவர் என்றும் நம் நினைவுகளில் உயர்ந்து நிற்பார். RIP என டிவிட் செய்துள்ளார்.

