ஒரே வார இறுதியில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து கொண்டிருக்கும் தசரா, பத்து தல மற்றும் விடுதலை படங்களில் விடுதலை அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.அதே போல் அழுத்தமான ஒரு கதை களத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் அட்மன் STR இணைந்து நடித்து வெளியாகியுள்ள பத்து தல படம் மக்களின் ஆதரவையும் கலந்த விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
முதல் பாதியில் சிம்புவை காணவில்லை. கௌதம் கார்த்திக் படத்திற்கு வந்ததை போல தான் இருந்தது என சிம்பு ரசிகர்களே புலம்பும் அளவிற்கு STR இன் அறிமுக காட்சி 57 வது நிமிடம் தான் நிகழ்கிறது.பிரியா பவானி சங்கர் அவர்கள் அதிகாரி கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
குறைவான காதல் காட்சிகள் அரசியல் களம் சூழ்ச்சி துரோகம் என பல்வேறு உணர்வுகளை ஒருங்கே கொண்டு வர வெகுவாக காட்சிகளில் மினக்கடல் தெரிகிறது. டி ஜே இளம் ரசிகர்களை ஈர்ப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரது கதாபாத்திரம் கொல்ல படுகிறது. வழக்கமாக கலையரசன் கதாப்பாத்திரம் கொல்லப்படும் நேரத்தை விடவும் இந்த படத்தில் அதி விரைவாக கொல்லப் படுகிறார்.கிங்ஸ்லி நகைச்சுவை பெரிதாக கிச்சு கிச்சு மூட்டவில்லை.
சிம்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வசனங்களும் காட்சிகளும் சிறப்பு. தொட்டி ஜெயாவில் சிம்புவின் கருப்பு உடை கொடுத்த கம்பீரம் இந்த படத்திலும் தருகிறது.”உங்களுக்கு எப்ப அண்ணன் கலியாணம்?” டயலாக்கின் போது அரங்கம் அதிர்கிறது. சந்தோஷ் முதலமைச்சராக பொருத்தம். ஒரு முதல்வர் காணாமல் போனால் அவரை மக்கள் வெகு விரைவில் மறந்து விடுவார்கள் போன்ற காட்சி அமைப்பு தற்கால அரசியலின் ஈர்ப்பு போலும்.
தவறான முன்னுதாரணம்: இன்றும் கோவிட் தடுப்பூசியின் அருமை புரியாமல் பல யூடியுப் சேனல்கள் தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி கொண்டிருக்கையில் தடுப்பூசியால் மக்கள் மடிவதாய் காட்சிகள் அமைப்பது அபத்தம். ஆனால் அதுவே ஒரு வரி மைய கதை என்பது இன்னும் பேரதிர்ச்சி.
லாஜிக் மீறல்கள்: கிளைமேக்ஸ் காட்சியில் திடீரென்று நிகழும் வன்முறை காட்சிகள்.ஒவ்வொரு முறையும் எதிரியின் தலையை துண்டாக்கும் நாயகன்.கௌதம் கார்த்திக் போலீஸ் என்று தெரிந்தும் அவரை உடன் வைத்துக் கொள்ளும் சிம்பு பிரிஸ்டல் கதாப்பாத்திரத்தை கொலை செய்ய சொல்வது.மணல் அள்ளுவது தாயின் மார்பை அறுப்பதற்கு சமம் ஆனால் நம் மக்களே அதனால் பயன்படட்டும் என்ற வசனம் ஏற்புடையது அல்ல. யார் அழித்தாலும் அழிவு ஒன்று தான். இயற்கை வளங்களை சுரண்டி தின்று விட்டு ஊருக்கு ஊர் முதியோர் இல்லம் திறந்தால் எல்லாம் சரியே என்ற எண்ணம்.
அருமை: இராவணன் கையில் கம்ப இராமாயணம்.