நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள், ஊழியர்கள், உள்ளிட்ட அனைவரும் முக்கவசம் அணிந்து பணியாற்றினர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முகக்கவசம் அணிந்து மருத்துவர்கள், ஊழியர்கள் பணியாற்றினர். நோயாளிகளுக்கும், அவர்களை பார்க்க வருவோருக்கும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.