இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்திற்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதில் 22 ஒற்றை இருக்கை கொண்ட ரஃபேல் கடல் விமானங்கள் மற்றும் நான்கு இரட்டை இருக்கைகள் கொண்ட பயிற்சியாளர் பதிப்புகள் அடங்கும்.
இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல்-எம் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில், இந்திய விமானிகளுக்கு பயிற்சி அளிக்க இரண்டு முதல் நான்கு ரஃபேல் விமானங்களை அனுப்ப பிரான்ஸ் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
பிரெஞ்சு தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காகவும், பாஸ்டில் தின ராணுவ அணிவகுப்பில் கெளரவ விருந்தினராக கலந்து கொள்வதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி (ஜூலை 13-ஜூலை 14) இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்ற நிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இந்த வர்த்தகத்தில் ரஃபேல் எம் ஜெட் விமானங்களில் 22 ரஃபேல் எம்எஸ் மற்றும் அதன் நான்கு இரட்டை இருக்கைகள் கொண்ட பயிற்சி பதிப்புகள் அடங்கும். மேலும், இந்திய கடற்படைக்காக மூன்று கூடுதல் ஸ்கோபீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களும் வாங்கப்படும்.
மேலும், இந்திய கடற்படைக்காக மூன்று கூடுதல் ஸ்கோபீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களும் வாங்கப்படும். 90,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றுள்ள நிலையில், இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே இதுகுறித்த விரிவான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது.



 
	 
						 
						