தமிழர்களுக்கு எதிரான கருத்து; சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அமைச்ர்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

பெங்களூரு ராமேஸ்வரம் காஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்புக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலகலத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறிய கருத்து எந்த உள்நோக்கத்துடனும், தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. தனது கருத்து தமிழர்களை புண்படுத்தியதை புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் மன்னிப்புக் கோரியதாகவும், தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது கருத்து யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்புக்கோருவதாகவும் இணையமைச்சர் ஷோபா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *