போப் பிரான்சிஸ் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். இந்த வாரம் அவர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் போப் பிரான்சிஸ் உடல்நிலை மோசம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். சுவாசக்கோளாறு காரணமாக கடந்த 14ம் தேதி முதல் போப் பிரான்சிஸ் வாடிகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போப் பிரான்சிஸ்க்கு நுரையீரலில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையிலும், போப் பிரான்சிஸ் உடல்நிலை பின்னடைவை அடைந்தாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
