வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் செயல்களைப் போற்றும் வகையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (பிரவாசி பாரதிய சம்மான்) விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
வெளிநாடுவாழ் இந்தியர்களின் நலன்கள் குறித்து விவாதிப்பதற்காக, ஆண்டுதோறும் “பிரவாசி பாரதிய திவாஸ்’ மாநாடு நடந்து வருகிறது. இந்தாண்டு ஜன. 08 முதல் ஜன.10ம் தேதி வரை மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் நடைபெற்றது. ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் வெவ்வேறு நாடுகளில் வாழும் 3,500 வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் செயல்களைப் போற்றும் வகையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பிரவாசி பாரதிய விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்தூர் வந்தார். அப்போது ஜனாதிபதிக்கு மத்திய பிரதேச கவர்னர் மற்றும் முதல்வர் தரப்பில் சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.