உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா.

இந்தியா இயற்க்கை உலகம் சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள் முதன்மை செய்தி வட அமெரிக்கா

78 வயதான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றார். அவர் தனது பதவியேற்ற பிறகு, “அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது” எனக் கூறி, தனது முதல் உரையில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார். கடவுள் தனது உயிரை காத்திருக்கிறான் என்பதற்கான தனது நம்பிக்கையை அவர் பகிர்ந்துகொண்டார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கைகளில், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவின் வெளியேற்றம் உள்ளிட்ட அதிரடி உத்தரவுகளை அந்நாட்டு அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார். அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் நோக்கில், தேசிய அவசர நிலையாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அகதிகள் அமெரிக்காவில் நான்கு மாதங்கள் வரை குடியேற்றத்தை நிறுத்துவதற்கான முடிவை ட்ரம்ப் எடுத்துள்ளார். “அதிக அளவிலான புலம்பெயர்வு அமெரிக்காவின் திறனை மீறுகிறது” என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதை தொடர்ந்தால், தனது நிர்வாகம் இந்திய பொருட்களுக்கு அதே அளவிலான வரியை விதிக்கும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யும் விதிமுறைக்கு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த விதிமுறையின் அடிப்படையில், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுவதற்கு, அந்த குழந்தையின் பெற்றோரில் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருக்க வேண்டும் என பல உத்தரவுகளில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *